நாட்டுப்பற்றுக்கு ஒரு சோதனை


நாட்டுப்பற்றுக்கு ஒரு சோதனை


வணக்கம். நான் ஒரு கணினி பொறியாளன். உங்கள மாதிரியே நாட்டுப்பற்றுள்ளவன்.  இதுல ஒரு விஷயம் பாருங்க, இந்த நாட்டுப்பற்றை எப்படி வெளிப்படுத்தறதுன்னு பல பேருக்கு தெரியறதில்லை.

நானும் யோசிச்சேன்.

வருஷத்துக்கு ஒரு முறை schoolலயோ, collegeலயோ, officeலயோ, தேசிய கோடி ஏத்தி கீதம் பாடினா ஆச்சா? இல்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அந்த உணர்வு நமக்குள் இருக்கணுமா?

நிச்சயமா இருக்கணும். இல்லியா?

சரி. அப்படின்னா மொதல்ல நாட்டுபற்றுன்னா என்னன்னு சின்னதா define பண்ணுவோம்.

நாட்டை பற்றிய ஒரு அக்கறை. நம் நாட்டு மக்களின் மீதுள்ள ஒரு அக்கறை. இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடத்தல் ஆகியன. இது மட்டும் இருந்தாலே போதும். அதாவதுங்க, நம்மை விட, நம்மை சார்ந்திருப்பவர்களின் நலனை நாம் உணரும்போது, நினைக்கும்போது, நாம் நாட்டுப்பற்று உள்ளவர்கள் ஆகிறோம்.

ஆனா, இது மனசளவுல இருந்தா மட்டும் போதாது. செயல்ல எப்படி காட்டுறது?

கஷ்டம் இல்லை... மிக சுலபம். உதாரணத்துக்கு, சாதாரண traffic signalஐ எடுத்துப்போம். நாம் என்ன செய்யறோம். முதலில், STOP LINE அப்படின்னு ஒண்ணு இருக்கு. அதை மீறி தான் வண்டியவே நிறுத்தறோம். [Stop line ஆ... சென்னைல அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு சொல்ற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது. அந்த discussion அப்புறமா வச்சிப்போம்]. அப்புறம், மற்றவங்களுக்கு signal கிரீன்ல இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி [சுத்த சென்னை தமிழ்ல சொல்லனும்னா பீறாஞ்சுக்குனே] போயி, பாதி ரோட்டுல நிப்பாட்டுவோம். எதிருல வர்றவனுக்கு green போயி yellow தான் வந்திருக்கும். அப்பவே உறுமி உறுமி, நமக்கு green வந்தவுடனே அவனை block பண்ணி, அவனை திட்டிகிட்டே அவசர அவசரமா போயி... ... ... அடுத்த சிக்னல்ல நிப்போம்.

நமக்கு இருக்குற அதே சுதந்திரம், உரிமை, மற்றவங்களுக்கும் இருக்குங்கறத மறக்கறோம், மறுக்குறோம்.

நம்மை திருத்த ஒரு போலீஸ்காரன் எதற்கு. போலிஸ பாத்தா சிக்னல்ல நிறுத்துவோம். இல்லைன்னா...

இதில என்ன ஒரு இழுக்குன்னா, உலகத்துக்கே கலாச்சாரம் என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்த தேசம் நமது. இந்த உண்மையை மறந்துவிட்டோம்... அல்லது மறக்கடிக்கப்பட்டோம்.

சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்து, மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது.

இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க நாம் கர்வம் கொள்ள வேண்டும். காந்தி முன்னே சொன்ன ஒரு வசனம் இப்பொழுது ஞாபகம் வருகிறது. Be the change that you wish to see in the world.

கலாச்சாரத்தின் சிகரமாய் இருந்த நாம் மீண்டும் அந்நிலைக்கு வர, நாம் எடுத்து வைக்கும் முதல் அடி.

நாளை என்றொரு நாள் வரவே வராதென்றார் இன்னொரு ஞானி. அதனால், செய்வதை இன்றே, இப்பொழுதே செய்வோம்.

ஆதலால், இன்று முதல், சாலையில் எங்கு சிக்னல் இருந்தாலும், அதை மதித்து நடப்போம். அது இரவு பன்னிரண்டு மணியானாலும் பரவாயில்லை, ரெண்டு மணியானாலும் பரவாயில்லை. அங்கு போலீஸ் இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி. இன்று முதல் சாலை விதிகளை மதிப்போம். நம் நாட்டுப்பற்றை அக்கறையால் வெளிக்கொணர்வோம்

இது தான் நாம் எடுத்து வைக்கும் முதல் அடி.

No comments:

Bluetooth on off Switch missing in Windows 10

  Sometimes, what happens is that you are unable to switch the Bluetooth in your PC or laptop. Even if you are a professional, it gets you f...

Most Popular

Copyrighted.com Registered & Protected DWYE-NHTO-NBNH-7FFM