வாழ்க்கை இரகசியம்


வாழ்க்கை இரகசியம்


சும்மா இரு என்று
முன்னர் கூறிய
குருவை வணங்குகின்றேன்

வாழ்க்கை இரகசியம்
என்னவென் றுணர்த்திய
குருவை வணங்குகின்றேன்

குருவே சரணம்
குருவே சரணம்
குரு திருவடி சரணம்

செய்வன திருந்த
செய்யென கூறிய
குருவை வணங்குகின்றேன்

நம் அனுபவம் செயலின்
பலனென உணர்த்திய
குருவை வணங்குகின்றேன்

குருவே சரணம்
குருவே சரணம்
குரு திருவடி சரணம்

நன்மை செய்து
பழகென கூறிய
குருவை வணங்குகின்றேன்

செயல் போல் வாழ்வென
நிறைவாய் உணர்த்திய
குருவை வணங்குகின்றேன்
 
குருவே சரணம்
குருவே சரணம்
குரு திருவடி சரணம்

Comments

Popular posts from this blog

Steps to install wkhtmltopdf in Centos 7 Redhat

Error when setting up _ installing MCrypt PHP Extension on Redhat 7 Enterprise x64

The Perils of ECR Chennai